close
Choose your channels

ரூ.50 கோடி வசூலை நெருங்குகிறது ''தனி ஒருவன்''

Tuesday, September 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம் இதற்கு முன்பு வெளியான இந்த சகோதரர்களின் படங்களை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் பெரிய சாதனை செய்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான 'தனி ஒருவன்' செப்டம்பர் 6ஆம் தேதி வரையில் ரூ.40.50 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இதற்கு பின்னர் வெளியான படங்களால் இந்த படத்தின் வசூலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் நேற்றைய 11வது நாளில் கூட இந்த படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகளில் 80 முதல் 90 சதவீதம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் வார வசூலை விட இரண்டாவது வார வசூல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கர்நாடக மாநிலத்தில் இந்த படம் ரூ.1.36 கோடி, நான்கே நாட்களில் வசூல் செய்துள்ளது. இது ஜெயம் ரவி படத்தின் புதிய சாதனை ஆகும்.

வரும் 11ஆம் தேதியும் 'யட்சன்' திரைப்படம் தவிர வேறு பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால், இந்த படம் கண்டிப்பாக ரூ.50 கோடி வசூலை அடுத்த வாரமே தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர்களின் அற்புதமான நடிப்பு, ஜெயம் ராஜாவின் வித்தியாசமான ஸ்கிரிப்ட், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வலுவான பின்னணி இசை ஆகியவையே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment