5 மொழிகளில் ரீமேக் ஆகிறதா ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ரீமேக் ராஜா என்ற பெயரை கடந்த பல வருடங்களாக பெற்றிருந்த ஜெயம் ராஜாவின் சொந்த ஸ்கிரிப்டில் உருவான 'தனி ஒருவன்' பெற்ற மிகப்பெரிய வெற்றியால் அவர் தற்போது 'தனி ஒருவன்' ராஜா என்றே அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இந்த படத்தை பல மொழிகளின் பிரபல நடிகர்கள் ரீமேக் செய்ய விரும்புகின்றனர். இதுவரை ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படம் சல்மான்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மோகன்லாலின் த்ரிஷ்யம்' படத்திற்கு பின்னர் தென்னிந்திய மொழி திரைப்படம் ஒன்று அகில இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் இந்த படத்தை ரீமேக் செய்ய புனீத் ராஜ்குமார் விரும்புவதாகவும், பிரபல நடிகை ஜெனிலியா இந்த படத்தின் மராத்தி மொழி உரிமையை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ராம்சரண் தேஜா விரும்புவதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com