5 மொழிகளில் ரீமேக் ஆகிறதா ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்?

  • IndiaGlitz, [Tuesday,September 08 2015]

ரீமேக் ராஜா என்ற பெயரை கடந்த பல வருடங்களாக பெற்றிருந்த ஜெயம் ராஜாவின் சொந்த ஸ்கிரிப்டில் உருவான 'தனி ஒருவன்' பெற்ற மிகப்பெரிய வெற்றியால் அவர் தற்போது 'தனி ஒருவன்' ராஜா என்றே அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இந்த படத்தை பல மொழிகளின் பிரபல நடிகர்கள் ரீமேக் செய்ய விரும்புகின்றனர். இதுவரை ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே இந்த படம் சல்மான்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மோகன்லாலின் த்ரிஷ்யம்' படத்திற்கு பின்னர் தென்னிந்திய மொழி திரைப்படம் ஒன்று அகில இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் இந்த படத்தை ரீமேக் செய்ய புனீத் ராஜ்குமார் விரும்புவதாகவும், பிரபல நடிகை ஜெனிலியா இந்த படத்தின் மராத்தி மொழி உரிமையை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ராம்சரண் தேஜா விரும்புவதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

ரூ.50 கோடி வசூலை நெருங்குகிறது ''தனி ஒருவன்''

சமீபத்தில் வெளியான ''தனி ஒருவன்'' திரைப்படம் இதற்கு முன்பு வெளியான இந்த சகோதரர்களின் படங்களை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் பெரிய சாதனை செய்துள்ளது...

பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்த பிரகாஷ்ராஜ்

இந்தியாவில் பல பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் இருப்பதால் அவற்றை பிரபலங்கள் தத்தெடுத்து முன்னேற்ற உதவவேண்டும்...

சென்னையின் பழமையான ஸ்டுடியோவில் 'தல 56'

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் நடந்து முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சுந்தர் சியின் 'அரண்மனை' ரிலீஸ் தேதி?

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து 'அரண்மனை 2' படத்தை அவர் இயக்கி வருகிறார்.....

தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா தூங்காவனம்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிவடைந்து தற்போது முழூவீச்சில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது....