close
Choose your channels

ஜெயம் ரவி ஒரு குட்டி கமல்ஹாசன். பிரபுதேவா

Sunday, December 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்தசாமி மற்றும் பலர் நடிப்பில் லட்சுமண் இயக்கியுள்ள 'போகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் பிரபுதேவா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பிரபுதேவா, 'ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகாவின் நடிப்பை புகழ்ந்து பேசினார். கடந்த 2011ஆம் ஆண்டு இதே ஜோடி நடித்த 'எங்கேயும் காதல்' என்ற படத்தை இயக்கியவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.
'சினிமாவில் பல நுணுக்கங்களை ஜெயம் ரவி அறிவார் என்றும் அவரை ஒரு குட்டி கமல்ஹாசன் என்று அழைக்கலாம் என்றும் பிரபுதேஆ கூறினார். மேலும் 'எங்கேயும் காதல்' படத்தில் ஹன்சிகாவும் நடிப்பிற்கும் 'போகன்' படத்தின் நடிப்பிற்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது என்றும் நடிப்பில் ஹன்சிகா பெருமளவு மெருகேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த திரைப்படம் கமர்ஷியல் மற்றும் எண்டர்டெயின் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் இந்த படத்திற்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment