ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

ஜெயம் ரவி, நிவேதா பேதுராஜ் நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள டிக் டிக் டிக்' திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் ஜெயம் ரவி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே வெளிவந்த செய்தியின்படி இந்த படம் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில்தான் விஷாலின் 'இரும்புத்திரை' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் இமானின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.