ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்?

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணி முடிந்து இந்த படம் சென்சாரில் 'யூ' சான்றிதழும் பெற்ற நிலையில் இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷனும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி இந்த படம் ஜனவரி 26ல் வெளியாகாது என்றும் அதற்கு பதிலாக பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பினை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் வரும் ஜனவரி 26ல் அனுஷ்காவின் 'பாகமதி', உதயநிதியின் 'நிமிர்' மற்றும் விமல் நடித்த 'மன்னார் வகையறா' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.

More News

பிப்ரவரி 2 முதல் கணக்கை தொடக்கும் விஜய்சேதுபதி

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக திரைப்படங்களை வெளியிட்டு அவற்றில் பல வெற்றி படங்களையும் கொடுத்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தனது கணக்கை தொடங்குகிறார்

சமூக போராளிகளின் கையினால் விருதினை பெற்ற சத்யராஜ்

சத்யராஜ் அவர்களுக்கு விகடன் நிறுவனம் சிறந்த குணசித்திர விருதினை வழங்கியது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் தனது சிறப்பான நடிப்பினால் முத்திரை பதித்த சத்யராஜூக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

'காலா' படத்தின் முக்கிய பணியில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் நடித்த '2.0' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர். விஜய்சேதுபதி பழுத்து பிஞ்சானவவர்: கீ ஆடியோ விழாவில் கே.வி.ஆனந்த்

ஜீவா, கோவிந்த், நிக்கி கல்ராணி, அனைய்கா சோட்டி, சுஹாசினி, ஆர்ஜே பாலாஜி, உள்பட பலர் நடிப்பில் காலீஷ் இயக்கத்தில் உருவான 'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் தான் இரும்புத்திரை: விஷால்

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.