ஜெயம் ரவியின் பிறந்த நாளில் 3 பட அப்டேட்டுகள்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஜெயம் ரவி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன.
ஜெயம் ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ’பிரதர்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி வெளியாகும் என இன்று காலை அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் ஜெயம் ரவி நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் வீடியோ ஒன்றை இயக்குனர் கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார். 47 வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் உள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜெயம் ரவி நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’ஜெனி’. அறிமுக இயக்குனர் புவனேஸ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அலாவுதீன் பூதத்தை போல் இருக்கும் இந்த போஸ்டரில் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா அபி ஆகிய இருவரும் தேவதை போல் தோன்றுகின்றனர். அலாவுதீன் கம்பளத்தில் வானத்தில் ஜெயம் ரவி மற்றும் இரு ஹீரோயின்களும் பறக்கும் வகையில் இருக்கும் இந்த போஸ்டரை பார்க்கும்போதே இது ஒரு மேஜிக்கல் படம் என்பது தெரிய வருகிறது.
ஜெயம் ரவியின் பிறந்த நாளில் அவர் நடித்து வரும் மூன்று படங்களின் அறிவிப்புகளளால் அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Happy birthday @actor_jayamravi from team #KadhalikkaNeramillai#HBDJayamRavi#HBD_Jayamravi#காதலிக்க_நேரமில்லை@actor_jayamravi@MenenNithya@astrokiru@RedGiantMovies_@arrahman@tseriessouth pic.twitter.com/oeBhNBKKem
— kiruthiga udhayanidh (@astrokiru) September 10, 2024
Wishing a magical birthday to our #Genie, @actor_jayamravi! 🧞♂️ May your journey on the magic carpet continue to bring positive vibes and success.
— Vels Film International (@VelsFilmIntl) September 10, 2024
Magic Sparkles Soon in Theaters ✨#HBDJayamRavi
Produced by @VelsFilmIntl Dr @IshariKGanesh
An @arrahman Musical
An #ArjunanJr.… pic.twitter.com/HmHpde2Rz1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com