நேரடி ஓடிடி ரிலீஸ் இல்லை.. ஜெயம் ரவி படக்குழுவினர்களின் திடீர் மாற்றம்..!

  • IndiaGlitz, [Sunday,January 14 2024]

ஜெயம் ரவி நடித்த திரைப்படம் வரும் குடியரசு தினத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படம் நேரடி ஓடிடி ரிலீஸ் இல்லை என்றும் அடுத்த மாதம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி நடித்த ’இறைவன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ’சைரன்’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என்று செய்திகள் வெளியானது

ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி ‘சைரன்’ திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக உள்ளது என்றும் பிப்ரவரி 9ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. திரையரங்கில் வெளியான பின்னரே ஜீ5 ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,. இந்த படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிய இந்த படத்தில் ஜெயம் ரவி கைதியாகவும் கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளனர்.