close
Choose your channels

ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தின் ஓடிடி+சாட்டிலைட் பிசினஸ்: இத்தனை கோடியா?

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ‘சைரன்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் என்றும் மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி பிசினஸ் குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனமும் பெற்றுள்ளதாகவும் இவை இரண்டும் சேர்ந்து 40 கோடிக்கும் அதிகமாக விலை போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,. அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment