ஜெயம் ரவி படம் உள்பட இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்? முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த ’சைரன்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் தற்போது இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது

அதேபோல் வைபவ், நந்திதா ஸ்வேதா நடித்த ’ரணம்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிகழ்வில் இந்த படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மேலும் ’யாவரும் வல்லவரே’ என்ற தமிழ் படம் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இதில் சமுத்திரக்கனி முக்கிய இடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் மற்ற மொழி திரைப்படங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

‘சாகு’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில், ‘மை டியர் டோங்கா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘ஜென்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஈடிவி வின் ஓடிடியில், ‘ராம அயோத்தியா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ‘சைலன்ஸ் 2’ என்ற இந்தி படம் ஜீ 5 ஓடிடியில், ‘ஆர்ட்டிக்கிள் 370’ என்ற இந்தி படம் ஜியோ சினிமாவில், ‘ஆல் இந்தியா ரேங்க்’ என்ற இந்தி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது

மேலும் ‘நீல ராத்திரி’ என்ற மலையாள திரைப்படம் சைனா ப்ளே என்ற ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது