தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஜெயம் ரவியின் முக்கிய அரசியல் பதிவு.. என்ன சொல்லியிருக்கார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது என்பதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4-ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. மேலும் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பது குறித்தும், சரியான நபரை தேர்வு செய்து வாக்களிப்பது குறித்தும் சமூக வலைதளத்தில் பல்வேறு பதிவுகள் பதிவாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் தனது முதல் அரசியல் பதிவை செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’வரும் பாராளுமன்ற தேர்தலில் நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தேர்தலில் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
நடிகர் ஜெயம் ரவி தான் நடித்த ‘பேராண்மை’ உள்பட பல படங்களில் அரசியல் வசனம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Urging all the young and first time voters of our country to come out and cast their vote in the upcoming election!
— Jayam Ravi (@actor_jayamravi) March 16, 2024
This election use your most basic democratic rights to VOTE for the right candidate.#MeraPehlaVoteDeshKeLiye
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout