close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்

Friday, October 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தலை பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் 25வது படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்திற்கு ‘பூமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் பற்றிய திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது. டட்லி ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில் தாமரை மற்றும் மதன்கார்க்கி பாடல் வரிகளில் ஸ்டண்ட் சில்வா ஆக்சனில் இந்த படம் உருவாகி வருகிறது

ஜெயம் ரவியின் 26வது படமான ‘ஜனகனமன’ என்ற படத்தை இயக்குனர் அஹ்மது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment