ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ஒரு சில திரைப்படங்களில் இந்த படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் ’அருள்மொழி வர்மன்’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்து வந்த ’பூமி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் இவ்வாண்டு மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகும் என ஜெயம் ரவி தனது சமூக வலை பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக்கை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to share the 2nd look of #Bhoomi !! See you in theatres on May 1st! God bless ??????#BhoomiSecondLook#BhoomiFromMay1st@dirlakshman @theHMMofficial @sujataa_hmm @immancomposer @AgerwalNidhhi @venketramg @actorsathish @dudlyraj @prathool @onlynikil @shiyamjack pic.twitter.com/pREAwjtDqi
— Jayam Ravi (@actor_jayamravi) January 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com