ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,January 16 2020]

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ஒரு சில திரைப்படங்களில் இந்த படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் ’அருள்மொழி வர்மன்’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்து வந்த ’பூமி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் இவ்வாண்டு மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகும் என ஜெயம் ரவி தனது சமூக வலை பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக்கை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மாநாடு' படத்தின் முதல் அப்டேட்: தளபதி விஜய் கனெக்சன்

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் அப்டேட்

விஜய்சேதுபதியா? யார் அவர்? ரசிகரின் கேள்வியும் கார்த்திக் சுப்புராஜின் பதிலும்!

நடிகர் விஜய் சேதுபதியை யாரென்று இன்று யாராவது கேட்டால் அவருக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது என்றுதான் அர்த்தம். ஆனால் பத்து வருடங்களுக்கு முன் விஜய் சேதுபதியை யாரென்று கேட்டால்

இப்படியே இருங்க, மாறாதீங்க: சூப்பர்டீலக்ஸ் நடிகரின் வாழ்த்து

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர் 

'தலைவி' படத்தின் எம்ஜிஆர் லுக்: ஒரு ஆச்சரியமான தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படும் 'தலைவி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

ரஜினிக்கு விசா மறுப்பா? இலங்கை அரசு விளக்கம்

நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது