ஜெயம் ரவியின் அடுத்த படம் 'பேபி' ரீமேக்கா? இயக்குனர் விளக்கம்
- IndiaGlitz, [Saturday,September 14 2019]
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜனகணமன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 26 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் டாப்ஸி, ஈரான் நடிகை ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் ’செக்கச் சிவந்த வானம்’ நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை அஜர்பைஜானில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள இயக்க்குனர் அஹ்மதுவிடம், ‘இந்த படம் ஹிந்தியில் ஹிட்டான ‘பேபி’ திரைப்படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகி வருவது குறித்த கேள்விக்கு, ‘இந்த படம் பேபி ரீமேக் படம் அல்ல. எது எனது சொந்த ஸ்கிரிப்ட். ஜெயம் ரவி ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கதைகளுக்கு பொருத்தமாக இருப்பதால் இரண்டும் கலந்த ஒரு கதையை திகில் கலந்து உருவாக்கியுள்ளேன். இது ஒரு பெரிய பட்ஜெட் த்ரில்லர் படம்' என்று கூறினார்.
இந்த பேட்டியின் மூலம் ‘ஜன கன மன’ திரைப்படம் ‘பேபி’ திரைப்படத்தின் ரீமேக் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2015ஆம் அனடு வெளியான பாலிவுட்டின் சூப்பர் ஹிட் திகில் திரைப்படமான பேபி திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் டாப்சி நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தின் ஹீரோவாக அக்சயகுமார் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.