அஜித்துக்கு பதில் ஜெயம் ரவி.. பொங்கல் ரிலீஸை உறுதி செய்த கிருத்திகா உதயநிதி..!

  • IndiaGlitz, [Thursday,January 02 2025]

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத காரணத்தினால் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், ’விடாமுயற்சி’ பொங்கல் ரிலீஸ் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, பல திரைப்படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இந்த படம் ஜனவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் சிங்கிள் பாடலாக வெளியிடப்பட்ட நிலையில், அந்த பாடல் தற்போது 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜெயம் ரவியின் ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செல்வராகவன் அடுத்த படத்தை உறுதி செய்த யுவன் ஷங்கர் ராஜா.. புதிய போஸ்டர்..!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாக இருக்கும் "மெண்டல் மனதில்" என்ற படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில்,

தனுஷின் 'இட்லி கடை'.. வேற லெவல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தனுஷ் நடித்து வரும் 'இட்லி கடை' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு ஃபர்ஸ்ட்

பொங்கல் ரிலீஸ்.. 'விடாமுயற்சி' விலகியதால் 7 படங்கள் ரிலீஸா?

அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு திடீரென தவிர்க்க முடியாத காரணத்தினால் பொங்கல்

புத்தாண்டை கொண்டாட குடும்பத்துடன் வெளிநாடு சென்ற அஜித்.. வைரல் வீடியோ..!

இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில், புத்தாண்டை கொண்டாட பல உலக பிரபலங்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். குறிப்பாக,

ஜாலியாக ஒரு போட்டிங்.. பிரபல நடிகருடன் புத்தாண்டை கொண்டாடும் நயன்தாரா..!

பிரபல நடிகர் மற்றும் அவருடைய மனைவியுடன் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டில் போட்டிங் செய்யும் புகைப்படத்தை