ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தின் முக்கிய பணி தொடக்கம்.. தள்ளி போகிறதா ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Thursday,August 10 2023]

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ’என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இறைவன்’. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அதில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் யுவன் சங்கர் ராஜா தனது குழுவினர்களுடன் பின்னணி இசை பணியில் பிசியாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காலதாமதமாகி வருவதை அடுத்து ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றும் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படம் ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'ஜெயிலர்' சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமா? நெல்சனின் அறிக்கையால் பரபரப்பு..!

தமிழ் சினிமாவில் சினிமாட்டிக்  யுனிவர்ஸ் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதும் தனது முந்தைய படத்தை கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில்  புத்திசாலித்தனமாக இணைத்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலாளி.. புதிய 'லியோ' ஸ்டில் உடன் தயாரிப்பாளருக்கு வாழ்த்து..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து உள்ள தயாரிப்பாளர் லலித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர்

மிஸ் யூ சார்.. இயக்குனர் சித்திக் மறைவுக்கு சூர்யாவின் நெகிழ்ச்சியான அறிக்கை..!

விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் சித்திக் நேற்றிரவு மாரடைப்பால் காலமான நிலையில் அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நாளை வெளியாகும் 'ஜெயிலர்' படத்துடன் இணைந்த தனுஷின் 'கேப்டன் மில்லர்': அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்  தனுஷின் 'கேப்டன் மில்லர்'

சேலையை இப்படி கூட கட்டலாமா? எருமை சாணி ஹரிஜாவின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

யூடியூப் மூலம் பிரபலமான எருமை சாணி ஹரிஜா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் வித்தியாசமான முறையில் சேலை அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை