3 கதாநாயகிகளுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜெயம் ரவி.. 'ஜெனி' அப்டேட்..!
- IndiaGlitz, [Friday,July 21 2023]
ஜெயம் ரவி நடிக்கும் 32 வது படமான ‘ஜெனி’ படத்தின் பூஜையுடன் கூடிய தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி ஆகிய 3 நாயகிகள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
மேலும் இந்த படம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் மகேஷ் முத்துசெல்வன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் - இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக மிகப்பெரிய செட் பெரும் பொருட்செலவில் போடப்பட்டு உள்ளதாகவும் இந்த செட்டில் 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் ஜெயம் ரவியுடன் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, மற்றும் வாமிகா கபி ஆகிய மூன்று நாயகிகள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.