close
Choose your channels

ரூ.2 கோடி மதிப்பில் பிரமாண்ட செட்.. இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு.. ஜெயம் ரவி படத்தின் அப்டேட்..!

Tuesday, March 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவி தற்போது கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’, எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’பிரதர்’ மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஜெனி ’ஆகிய மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில் ’ஜெனி படத்தின் சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில், மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த அர்ஜூனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெனி’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், மற்றும் வாமிகா ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தை பிரமாண்டமாக வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இரண்டு கோடி ரூபாய் செட்டில் அமைக்கப்பட்ட ரயிலில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி நிறுவனம் ஒன்று செய்து வருவதாகவும் ’அயலான்’ படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த அதே நிறுவனம் தான் ’ஜெனி படத்திற்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதம் இருப்பதாகவும் அதன் பிறகு இரண்டு பாடல்கள் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெனி திரைப்படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் ஜெயம் ரவியின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment