இதுவரை திரையில் தோன்றாத வித்தியாசமான லுக்: ஜெயம் ரவியின் மிரட்டும் “சைரன்” பட ஃப்ரீ பேஸ் லுக் !!

  • IndiaGlitz, [Sunday,September 10 2023]

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் ஃப்ரீ பேஸ் லுக் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு பிரத்தியேக விருந்தாக, சைரன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வெறும் போஸ்டராக இல்லாமல் ஆச்சரியம் தரும் ஒரு சிறு வீடியோவாக இந்த ஃப்ரீ பேஸ் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஃப்ரீபேஸ் லுக்கில், 21 வருட திரைப்பயணத்தில் நடிகர் ஜெயம் ரவி இதுவரை திரையில் தோன்றியிராத தோற்றத்தில், சால்ட் & பெப்பர் லுக்கில் மிரட்டலாக காட்சியளிக்கிறார். இக்கதாப்பத்திரத்திற்காக தன் உடலை மாற்றி 1 1/2 வருடங்கள் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அனுபவம், அமைதியும் கலந்த தோற்றத்தில், பார்க்கும்போதே பயம் தரும் கோபமான முகத்துடன், அசத்தலாக காட்சியளிக்கிறார் ஜெயம் ரவி. இதற்கு நேரெதிராக இளமையும் துள்ளலுமான இன்னொரு பாத்திரத்தில் அவர் தோன்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தற்போது வெளியாகியிருக்கும் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக அமைந்துள்ளது.

More News

சில்க் ஸ்மிதாவை 'மார்க் ஆண்டனி' புரமோஷனில் அறிமுகம் செய்த படக்குழு.. வைரல் வீடியோ..!

விஷால் மற்றும் எஸ்ஜே. சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

பிக்பாஸ் தொடங்குவது எப்போது? இந்த 8 போட்டியாளர்கள் கலந்து கொள்வது உறுதியா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த புரமோ வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி மற்றும் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் கசிந்து வருவதை

'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன் கேரக்டரில் இந்த எழுத்தாளரா? சரியான தேர்வுதான்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து திடீரென நேற்று காலமானது அந்த சீரியல் குழுவினர்களுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த குக் வித் கோமாளி பிரபலமா? காமெடிக்கு பஞ்சமே இருக்காது..!

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்தோம்.

ஏண்டா ரிவ்யூ பண்ற பொறுக்கிங்களா, தலைவர் படத்தையே குறை சொல்வியா? 'ரத்தம்' டிரைலர்..!

விஜய் ஆண்டனி நடித்த 'ரத்தம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில்