'கோமாளி' பட நாயகிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தின் நாயகிகளில் ஒருவரான சம்யுக்தா ஹெக்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’வாட்ச்மேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதன் பின்னர் அவர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ பிரபுதேவா நடித்த ’தேள்’அசோக்செல்வன் நடித்த ’மன்மதலீலை உட்பட ஒரு சில படங்கள் தமிழ் படங்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் இயக்கிவரும் ’க்ரீம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சியில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயமடைந்ததையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்யுக்தா ஹெக்டே காயம் காரணமாக ’கிரீம்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்யுக்தா ஹெக்டே குணமாகியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.