close
Choose your channels

ஜெயம் ரவியின் 'பிரதர்'.. இசை , டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

Friday, September 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி வந்த ’பிரதர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இயக்குனர் ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரது டப்பிங் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டதாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து மற்ற நட்சத்திரங்களை டப்பிங் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தருகிறது.

இந்த நிலையில் ’பிரதர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழா ஆகிய இரண்டும் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு கம்போஸ் செய்த பாடலை ரசிகர்களுக்கு கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் விறுவிறுப்பாக பின்னணி இசை பணிகளையும் ஒரு பக்கம் கவனித்து வருவதாகவும் இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், சீதா, நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவும் அபிஷிஸ் ஜோசப் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment