ஜெயம் ரவியின் பிறந்த நாளில் 'பிரதர்' படத்தின் முக்கிய அறிவிப்பு.. ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘பிரதர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடித்த ‘பிரதர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது.
எம் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இசை வெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி வெளியாகும் என்றும் அதே நாளில் டீசர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து ஜெயம் ரவி ரசிகர்களுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி இரட்டை விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், சீதா, நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவும் அபிஷிஸ் ஜோசப் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
Get ready for a Musical Extravaganza🎷🎺🥁 @actor_jayamravi's #Brother GRAND AUDIO & TEASER LAUNCH on Sep 21st !
— Screen Scene (@Screensceneoffl) September 10, 2024
A @Jharrisjayaraj Vibe 🎸https://t.co/VJ3KtiPxIO#HappyBirthdayJayamRavi #HBDJayamravi #HBDJR@rajeshmdirector @priyankaamohan pic.twitter.com/5V4cgK03ew
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments