அடிமைமையாய் இருக்கோம்ன்னு தெரியாத வரைக்கும்தான்: ஜெயம் ரவியின் 'பூமி' டீசர்
Send us your feedback to audioarticles@vaarta.com
’அடிமைமையாய் இருக்கோம்ன்னு தெரியாத வரைக்கும் தான் உன்னை மாதிரி ஆளுங்கல்லாம் இங்க இருக்க முடியும், தெரிஞ்சுதுன்னு வச்சிக்கோ’ என்று ஆக்ரோஷத்துடன் முடியும் ‘பூமி’ படத்தின் டீசர் நிச்சயம் ஜெயம் ரவியின் இன்னொரு மைல்கல் படம் என்றே கருதப்படுகிறது.
ஜெயம் ரவியின் கதைத்தேர்வு எப்போதுமே வெற்றியின் பக்கம் தான் இருக்கும் என்பதற்கு அவரது சமீபத்திய படங்கள் சான்று. அந்த வகையில் விவசாயம், புரட்சி என்ற கதையை தேர்வு செய்துள்ள ஜெயம் ரவிக்கு இந்த படம் இன்னொரு ‘பேராண்மை’, படம் போல் இருக்கும் என கருதப்படுகிறது.
விவசாயிகளின் கஷ்டத்தை சொல்கிறேன் என்ற போர்வையில் தேவையில்லாமல் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் விவசாய கருத்துக்களை திணிக்கும் இயக்குனர்கள் மத்தியில் உண்மையாகவே ஒரு விவசாயிக்கான முழுமையான கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லட்சுமண். ஜெயம் ரவியின் ஆவேசமான நடிப்பும், டி.இமானின் அட்டகாசமான பின்னணி இசையில் டீசரை பார்க்கும்போதே சிலிர்க்க வைக்கின்றது. டட்லியின் அட்டகாசமான ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பிளஸ்.
’வட்டிக்கு காசு வாங்கி விவசாயம் செஞ்சும் ஒருவேளை சோத்துக்கு வழியில்லாமல் போயிட்டோம்யா’ என்ற வசனமும், ‘நாட்டோட எல்லா வளத்தையும் நாசம் பண்ணிட்டு நீங்கள் எல்லாம் என்ன சார் பண்ணப்போறிங்க’ என்ற கேள்வியும் இன்றைய அரசியல்வாதிகளுக்கான சாட்டையடி கேள்வி. மொத்தத்தில் ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான திரைவிருந்து காத்திருக்கின்றது என்பதுதான் இந்த டீசரில் இருந்து தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com