'நான் படிக்காத அடியாளு, நீ படிச்ச அடியாளு'.. ஜெயம் ரவியின் 'அகிலன்' டிரைலர்..!
- IndiaGlitz, [Sunday,March 05 2023]
ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதால் ஆக்சன் பிரியர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்கு கப்பலில் கண்டெய்னர் ஏற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஜெயம் ரவி செய்யும் சட்டவிரோத செயல்கள், அதை பிடிப்பதற்காக காவல்துறை எடுக்கும் நடவடிக்கை தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறை அதிகாரியாக பிரியா பவானி சங்கர் அகிலனை என்கவுண்டரில் சுட்டு தள்ள முயற்சி செய்வதும், அகிலன் அதிரடியாக தனது முதலாளிக்கு வேலை செய்வதுமான காட்சிகள் இந்த ட்ரெய்லரில் உள்ளன.
மொத்தத்தில் ஜெயம் ரவி இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெயம் ரவி இந்த படத்தில் ‘பேராண்மை’ படம் போலவே பொருளாதார அரசியல் வசனங்களையும் பேசியுள்ளார்.
கல்யாண் இயக்கத்தில் விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில் கணேஷ் குமார் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரேஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், மதுசூதன் ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துல்ல இந்த படம் சென்சாரில் ‘யூஏ’ சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.