ஜெயம் ரவியின் 'அகிலன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Saturday,March 11 2023]

ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில கலவையான விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படம் தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இந்த படம் முதல் நாளில் நல்ல வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் இந்த படம் மூன்றரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் இரண்டு கோடி வசூல் செய்துள்ளதாகவும் திரை உலகின் தெரிவித்துள்ளனர்.

இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த இரண்டு நாட்களில் நல்ல வசூல் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாததால் ‘அகிலன்’ திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.