ஜெயம் ரவியின் 34வது பட அறிவிப்பு..! இயக்குனர், இசையமைப்பாளர் யார் யார்?

  • IndiaGlitz, [Saturday,October 05 2024]

நடிகர் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 34-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து, இது குறித்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, தற்போது 'பிரதர்', 'ஜெனி', 'காதலிக்க நேரமில்லை' ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் 'பிரதர்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜெயம் ரவியின் 34-வது திரைப்படத்தை கணேஷ் பாபு என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பதும், அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜெயம் ரவி மற்றும் கணேஷ் பாபு இணையும் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போஸ்டரை ஜெயம் ரவி தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தை ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

வனிதா விஜயகுமார் - ராபர்ட் மாஸ்டர் சேர்வது உண்மைதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்த புகைப்படம் வெளியாகி, அக்டோபர் ஐந்தாம் தேதி இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதும் தமிழ்ப்படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு போட்டியாக

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என எனக்கு முன்பே தெரியும்: லோகேஷ் கனகராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி அனுமதிக்கப்படுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'குட் பேட் அக்லி' படத்தில் 'பில்லா' நடிகர்? 14 வருடங்களுக்கு பின் மீண்டும் அஜித் படத்தில்..!

அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பில்லா' படத்தில் நடித்த முக்கிய நடிகர் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்துள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அவர் அஜித் உடன் இணைந்து

சிங்கம் சிங்கிளா வருது.. இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் தளபதி விஜய் நடித்த 'கோட்'