ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,October 18 2016]

கடந்த ஆண்டு கோலிவுட்டின் வெற்றி நாயகனாக வலம் வந்த ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு 'மிருதன்' படம் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது. இந்நிலையில் 'தனி ஒருவன்' படத்தை அடுத்து மீண்டும் அரவிந்தசாமியுடன் ஜெயம் ரவி நடித்து வந்த 'போகன்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறை தின வாரத்தில் அதாவது டிசம்பர் 23ஆம் தேதி வெளிவரவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் டீசர் வெளிவரவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் ஜெயம் ரவியின் சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா, அக்ஷரா கெளடா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தி 'ரோமியோ ஜூலியட்' பட இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ளார். பிரபுதேவாவின் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

More News

மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' ரிலீஸ் திட்டம்

ஓகே கண்மணி' வெற்றி படத்தை அடுத்து மணிரத்னம் தற்போது இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'தல 57' பாடல்கள் மற்றும் இசை பற்றி அனிருத் தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் 'தல 57' படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ஆர்யா

தமிழ் திரையுலகின் சிறந்த நண்பர்கள் ஆர்யாவும் விஷாலும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய திரையுலகை அதிசயிக்க வைத்த 'பாகுபலி 2' வியாபாரம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது தயாராகி வரும் 'பாகுபலி 2' படத்தின் வியாபாரம் இந்திய திரையுலகையே அதிசயிக்க வைத்துள்ளது

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் டைட்டில்..

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் தீபாவளி தினத்தின் வெளிவர வாய்ப்பு உள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.