சிங்கத்தின் கர்ஜனைக்கு பின் 'போகன்' வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

சூர்யாவின் 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் 'போகன்' வசூல் எந்தவிதத்திலும் பாதிப்பு இன்றி வெற்றிகரமாக தொடர் வசூலை செய்து கொண்டிருக்கின்றது.

பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைத்த ஆதரவு காரணமாக இரண்டாவது வாரமாக பெருவாரியான திரையரங்குகளில் 'போகன்' ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 17 திரையரங்குகளில் 201 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.45,62,120 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2ஆம் தேதியில் இருந்து இந்த படத்தின் மொத்த வசூல் ரு.2,68,72,860 என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 'போகன்' வெளியான அதே தேதியில் வெளியான 'எனக்கு வாய்த்த அடிமைகள்' திரைப்படம் கடந்த வார இறுதியில் சென்னையில் ரூ.76,880 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இதுவரையிலான மொத்த சென்னை வசூல் வசூல் ரூ.35,11,750 ஆகும்.

More News

தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞர் பாலுமகேந்திரா. நினைவு தின சிறப்பு கட்டுரை

'ஒரு படைப்பாளிக்கு அடிப்படை தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்து கொண்டிருக்கும். ஏ

முதல்வரின் கையை வெட்டுவதாக கூறிய கலைராஜன் மீது வழக்குப்பதிவு

தமிழக முதல்வர் ஒபிஎஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய இருவரில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்ற பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் இருதரப்பினர்களின் ஆதரவாளர்களும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்....

ஓபிஎஸ் கருத்துக்கு வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு. சசிகலா அதிர்ச்சி

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜக பின்னணியில் இருந்து ஆதரவு வழங்கி வருவதாக பல கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் கூறிய கருத்து ஒன்றுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

பிப்ரவரி 18-ல் உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும். ராகவா லாரன்ஸ்

கடந்த மாதம் மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான எழுச்சி போராட்டம் உலகின் கவனத்தை திருப்பிய புரட்சி போராட்டம். இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட அனைத்து தரப்பினர்களும் ஆதரவு கொடுத்தனர். கடைசி நாள் வன்முறையில் முடிந்தாலும், இந்த போராட்டம் சரித்திரத்தில் இடம்பெற்று விட்டது...

நான். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவன். பிரபல காமெடி நடிகர்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் காமெடி நடிகர்களில் ஒருவர் கருணாகரன். பீட்சா, சூதுகவ்வும், யாமிருக்க பயமே, இன்று நேற்று நாளை, கெத்து உள்பட பல திரைப்படங்களில் கருணாகரனின் காமெடி ரசிகர்களால் வரவேற்பை பெற்றது...