ஜெயம் ரவியின் 'போகன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 02 2016]

ஜெயம் ரவி, அரவிந்தசாமி நடித்த 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும் இதே கூட்டணி நடித்து வரும் 'போகன்' திரைப்படத்தை 'ரோமியோ ஜூலியட்' இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'போகன்' படத்தின் டீசர் நவம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஜெயம் ரவி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா, அக்ஷரா கெளடா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபுதேவாவின் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதி-சமந்தா படத்தில் இணையும் இந்திய பிரபலம்

'ஆரண்ய காண்டம்' என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின்...

தமிழக மக்களுக்கு சமந்தாவின் மிகப்பெரிய சேவை

நடிகை சமந்தா சிறந்த நடிகையாக மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதை அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம்...

கமல்ஹாசனை பிரிகிறார் கவுதமி

உலகநாயகன் கமல்ஹாசனுடன் கடந்த 13 வருடங்களாக துணைவியாக வாழ்ந்து வந்த நடிகை கவுதமி திடீரென அவரை பிரிய முடிவு எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது...

இயக்குனர் ஆகிறார் சூப்பர் ஸ்டார் நடிகரின் தங்கை

தெலுங்கு திரையுலகின் முன்னாள் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மகன் மகேஷ்பாபு தற்போது சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில்...

உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மருமகளும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய்...