மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்த பிரபல தமிழ் ஹீரோ!

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று முதல் டீ கடைகள், ஓட்டல்கள், மற்றும் அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற கடைகள் யாவும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இன்னும் சலூன்கள், முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள், ஸ்பா ஆகியவை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக முடி கொட்டாமல் இருக்கும் ஏராளமானோர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக் கொண்டும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி முடி வெட்டிக் கொண்டும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பொது மக்களைப் போலவே திரையுலக நட்சத்திரங்களும் தங்களுக்கு தாங்களே தலைமுடி வெட்டிக் கொண்ட புகைப்படங்களையும், தங்கள் மகன்களுக்கு முடி வெட்டிய புகைப்படங்களையும் அவ்வப்போது தங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.

அந்தவகையில் கோலிவுட் திரையுலகில் பிரபல ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி தனது மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்த காட்சி குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விண்ணை தாண்டி வருவாயோ 2' டீசரை வெளியிட்ட கெளதம் மேனன்?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணை தாண்டி வருவாயோ' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக், ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களை

சென்னையில் மட்டுமே 500க்கும் மேல்: கொரோனாவின் கோரத்தாண்டவம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் மட்டுமே கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்ததாக

ஊரடங்கு நேரத்தில் 22 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்திலும் 22 வயது இளம் பெண் ஒருவரை 80 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

அடித்தட்டு மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் முதலாளித்துவக் கிருமி: கொரோனா குறித்து வைரமுத்து கவிதை

கவியரசு வைரமுத்து கடந்த சில நாட்களாக கொரோனா குறித்த கவிதைகளை தனது சமூக வலைத்தளத்தில் எழுதி வருகிறார் என்பதும் அவரது கவிதைகளுக்கு நெட்டிசன்களின் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது

இந்து மகா சபா புகார் எதிரொலி: விஜய்சேதுபதி தரப்பின் பதிலடி

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விஜய்சேதுபதி காமெடியாக பேசியதை ஒருசிலர் சர்ச்சையாக்கியுள்ளனர் என்பதும், இதுகுறித்து இந்து மகா சபா  என்ற அமைப்பு காவல்துறையில்