'இந்த மனசு தான் சார் தங்கம்'..ஜெயம் ரவியின் தாராள மனதை பார்த்து ஆச்சரியமடைந்த கோலிவுட்..!
- IndiaGlitz, [Thursday,November 30 2023]
தமிழ் திரை உலகில் இதுவரை ஒரு திரைப்படத்தின் டைட்டிலில் முதலில் நாயகன் பெயர் மட்டுமே இருக்கும் என்பதும் நாயகி பெயர் அடுத்தடுத்து தான் வரும் என்பதும் தெரிந்ததே. ஆனால் முதல் முறையாக நேற்று வெளியான ’காதலிக்க நேரமில்லை’ என்ற திரைப்படத்தில் நாயகி நித்யா மேனன் பெயர் முதலாவதாகவும் நாயகன் ஜெயம் ரவி பெயர் இரண்டாவதாகவும் இருந்ததை பார்த்து கோலிவுட் திரை உலகை ஆச்சரியமடைந்தனர்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம் ரவியே, இயக்குனரிடம் இந்த படத்தில் நித்யா மேனனுக்கு ஹீரோவுக்கு சரிசமமான கேரக்டர் இருப்பதால், அவரது பெயரை முதலில் போடுங்கள் என்று பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
எந்த ஒரு நடிகரும் செய்ய முயற்சிக்காத ஒன்றை ஜெயம் ரவி செய்துள்ளதாகவும் அவருடைய தாராள மனம் ஆச்சரியம் அடைய வைத்ததாகவும் கோலிவுட் திரை உலகினர் தெரிவித்து வருகின்றனர்
இனிவரும் காலத்திலும் இதேபோல் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் ஜெயம் ரவியின் கொள்கையை மற்ற பிரபல நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.