ஜெயம் ரவியின் 'ஜெனி' படத்தின் 3 நாயகிகள் இவர்கள் தான்.. பூஜை புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

ஜெயம் ரவியின் 32 வது திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியானது என்பதும் இந்த படம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 வது படம் என்ற அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மூன்றாவது நாயகி யாராக இருக்கும் என்ற சஸ்பென்ஸ் இருந்தது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் அந்த மூன்றாவது நாயகி என்பது தெரிய வந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர்களுடன் பாலிவுட் நடிகை வாமிகா கபி இன்றைய பூஜையில் கலந்து கொண்டார். இதனை அடுத்து இவர் தான் மூன்றாவது நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை வாமிகா கபி பல இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார் என்பதும் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் உருவான ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது

ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் மகேஷ் முத்துசெல்வன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.

More News

சுதா கொங்கராவின் அடுத்த படத்தை மறைமுகமாக அறிவித்த ஜிவி பிரகாஷ்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

இயக்குனர் சுதா கொங்கரா தற்போது 'சூரரைப்போற்று' ஹிந்தி படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த மறைமுகமான அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில்

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

3-வது மனைவியை விவாகரத்து செய்கிறாரா ஸ்டார் நடிகர்? இணையத்தில் வைரலாகும் தகவல்

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நடிகர் பவண் கல்யாண் தன்னுடைய மனைவி ஆனா வெஸ்வெனாவை விட்டு பிரிந்து விட்டதாகவும்

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு: அட்டகாசமான புகைப்படங்கள்..!

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 

10 வருடங்கள் ஆகியும் இன்னும் நிறுத்த முடியவில்லை.. நடிகை வனிதாவின் உருக்கமான பதிவு..!

 நடிகை வனிதாவின் தாயாரும் பழம்பெரும் நடிகையுமான மஞ்சுளாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தனது தாயாரின் பிறந்தநாளில் உருக்கமான பதிவை நடிகை வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில்