முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் திரை உலக பிரபலங்கள் தாராளமாக முதல்வரிடம் நிதி அளித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஜெயம்ரவியின் குடும்பத்தினர் சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் கொரோனா நிவாரன நிதியாக கொடுத்துள்ளனர்.

ஜெயம் ரவி, அவருடைய சகோதரர் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் எடிட்டர் மோகன் ஆகியோர் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை கொரோனா நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தல அஜீத் உள்பட பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் முதலமைச்சர் நிவாரண நிதியாக அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது இன்றும் கூட தமிழகத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா? ஐசிஎம்ஆர் சொல்வது என்ன?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து கோவேக்சின், கோவிஷீல்டு எனும் இரு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

சசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா? தினகரன் மத்தியஸ்தமா?

அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணி அமைக்கப் போவதாக சில வதந்தி உலா வந்து கொண்டிருக்கின்றன

கத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்....! ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..!

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

பட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்தார் என்பதும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது