'போகன்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி

  • IndiaGlitz, [Wednesday,March 16 2016]

இந்த ஆண்டில் ஜெயம் ரவி நடித்த முதல் வெற்றிப்படமான 'மிருதன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'போகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் முதல் அதாவது மார்ச் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.


சென்னை அருகேயுள்ள மின்னி மில்லில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், அங்கு சுமார் ஒருவாரம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவியுடன் ஹன்சிகா, அரவிந்தசாமி உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை லக்ஷ்மண் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'ரோமியோ ஜூலியட்' திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பிரபுதேவாவின் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் நடித்த அக்ஷரா கவுடா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அனிருத்தின் முதல் பேய்ப்படத்தில் இணையும் மிஷ்கின் நாயகன்

தனுஷ் நடித்த 'தங்கமகன்' திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் ஹீரோவாக நடிக்கும் 'ரம்' திரைப்படம் சமீபத்தில் தொடங்கப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

பாஜக எம்.எல்.ஏவுக்கு த்ரிஷா விட்ட சாபம்

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை த்ரிஷா, நடிப்பில் மட்டுமின்றி விலங்குகளின் நலனுக்காகவும்...

இளையராஜாவின் 1001-வது படத்தின் இசை வெளியீடு விழா தேதி

இசைஞானி இளையராஜா 'தாரை தப்பட்டை' படத்துடன் 1000 படங்களுக்கு இசையமைத்து கின்னஸ் சாதனை செய்துள்ள நிலையில் அவருடைய இசைப்பயணம்...

'தெறி'யில் விஜய்க்கு எத்தனை வேடம். இதுவரை வெளிவராத தகவல்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும்...

'விசாரணை' பாணியில் படமாகும் இன்னொரு நாவல்

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது...