'போகன்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி

  • IndiaGlitz, [Wednesday,March 16 2016]

இந்த ஆண்டில் ஜெயம் ரவி நடித்த முதல் வெற்றிப்படமான 'மிருதன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'போகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் முதல் அதாவது மார்ச் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.


சென்னை அருகேயுள்ள மின்னி மில்லில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், அங்கு சுமார் ஒருவாரம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவியுடன் ஹன்சிகா, அரவிந்தசாமி உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை லக்ஷ்மண் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'ரோமியோ ஜூலியட்' திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பிரபுதேவாவின் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் நடித்த அக்ஷரா கவுடா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.