ஆகஸ்ட் 28, செப்.10: அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஜெயம் ரவி..!

  • IndiaGlitz, [Friday,August 25 2023]

ஜெயம் ரவி ஏற்கனவே 4 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தனி ஒருவன்’ திரைப்படத்தின் அறிவிப்பு வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி தற்போது நயன்தாராவுடன் இறைவன், கீர்த்தி சுரேஷ் உடன் ‘சைரன்’, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி , வாமிகா கபி ஆகிய 3 நடிகைகள் நாயகிகளாக நடிக்கும் ‘ஜெனி’ மற்றும் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவி - ராஜேஷ் எம் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஜெயம் ரவியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் பூமிகா, ஜெயம் ரவியின் சகோதரி கேரக்டரில் நடித்துள்ளார். அக்கா தம்பி பாசத்தின் கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

எனவே ஜெயம் ரவியின் ’தனி ஒருவன் 2’ அறிவிப்பு ஆகஸ்ட் 28ஆம் தேதியும், செப்டம்பர் 10ஆம் தேதி ’ஜெயம் ரவி 30’ படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

More News

தேவிஸ்ரீ பிரசாத்தை மட்டுமல்ல, அனைவரையும் மனதார வாழ்த்திய கமல்ஹாசன்.. வைரல் அறிக்கை..!

 நேற்று 69 வது தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன்  சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது

தமிழ் சீரியல்களின் டிஆர்பி.. முதல் 10 இடங்களில் 7 சன் டிவி சீரியல்கள்..!

தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி தான் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி இடத்தில் உள்ளது. விஜய் டிவி மற்றும் ஜீ டிவி சீரியல்கள் சிறப்பாக கொண்டு வந்து கொண்டிருந்தாலும்

இசையமைப்பாளர் தமனுக்கே தெரியாமல் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி.. களைகட்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.  குறிப்பாக  நடுவரில் ஒருவராக கலந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தமன்

இந்த விருது மிகப்பெரிய ஊக்கம்.. 'கடைசி விவசாயி' இயக்குநர் ம. மணிகண்டன் நன்றி கடிதம் !

நேற்று 69 வது தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழில் வெளியான 'கடைசி விவசாயி' என்ற திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் தனது நன்றியை

தேசிய விருது பெற்ற ஒரே ஒருவருக்கு மட்டும் வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்..! என்ன காரணம்?

69 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய விருதுகள் பெற்ற ஒரே ஒருவருக்கு மட்டுமே உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.