close
Choose your channels

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயம் ரவி.. வாழ்த்து கூறிய 3 நாயகிகள்..!

Sunday, September 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் ‘ஜெனி’ படத்தின் படப்பிடிப்பின்போது பிறந்தநாளை கொண்டாடி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் படங்களில் ஒன்று ’ஜெனி’. மிஷ்கின் உதவியாளர் அர்ஜுனன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் வாமிகா காபி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று படப்பிடிப்பின் இடையே ஜெயம் ரவி தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய போது மூன்று நாயகிகள் உட்பட குழுவினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment