சுந்தர் சியின் மெகா பட்ஜெட் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,December 28 2016]

கோலிவுட் திரையுலகில் '2.0', 'பாகுபலி 2' படங்களுக்கு நிகராக பிரமாண்டமான பட்ஜெட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் எதிர்பார்த்தபடியே 'சங்கமித்ரா' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படிப்படியாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

More News

'அஜித் 56' உரிமையை பெற்றதா ஜாஸ் சினிமாஸ்?

அதிமுகவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் சசிகலாவை சமீபத்தில் அஜித் சந்தித்ததாக செய்தி வெளிவந்து அந்த செய்தி அஜித் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவின் படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்த மாதம் 15 முதல் 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்து...

பத்திரிகையாளர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் எழுதிய நன்றி கடிதம்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர்...

அ.இ.அ.தி.மு .க பொதுச்செயலாளரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும் நடிகை லதா அறிக்கை

புதிய அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் எம்.ஜி.ஆருடன்...

அமீர்கானின் 'டங்கல்' ரீமேக்கில் அஜித். பிரபல நடிகை கருத்து

கடந்த வாரம் வெளியான அமீர்கானின் 'டங்கல்' திரைப்படம் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஹிட்டாகியுள்ளது...