ஜெயம் ரவி-அரவிந்தசாமியின் 'போகன்' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,January 10 2017]

ஜெயம் ரவி மற்றும் அரவிந்தசாமி இணைந்து நடித்த 'தனி ஒருவன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் ஜெயம் ரவி, அரவிந்தசாமி இணைந்து நடித்துள்ள படம் 'போகன்'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 'போகன்' திரைப்படத்தின் சென்சார் முடிந்துவிட்டதால் மிகவிரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா, அக்சரா கெளடா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.

More News

ஐஸ்வர்யாராய் தான் எனது முதல் சாய்ஸ். ஜெயலலிதா கூறியது ஏன்?

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யாராய் பொருத்தமாக இருப்பார் என்றே கருதப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் நடித்த 'இருவர்' படத்தில் ஐஸ்வர்யா நடித்த இரண்டு கேரக்டர்களில் ஒரு கேரக்டர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

ஜல்லிக்கட்டை ஒட்டுமொத்தமாக தடை செய்வது தவறு. பிரபல பாடகி

தமிழகம் முழுவதும் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஜல்லிக்கட்டு.

'ராஜா ரங்குஸ்கி' கதாநாயகி மாற்றம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இயக்கவுள்ள அடுத்த படம் ''ராஜா ரங்குஸ்கி''

30 ஆண்டுகளுக்கு பின் விஜய் அம்மாவிடம் வாழ்த்து பெற்ற பிரபல நடிகர்

கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபல நடிகராக இருந்த ரகுமான், கடந்த சில வருடங்களாக வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக உள்ளார்.

ஜல்லிக்கட்டு களத்தில் குதித்தார் தனுஷ்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீரவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலகினர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.