ட்விட்டரின் ப்ளூடிக் இழப்பு.. முதல்முறையாக விளக்கமளித்த ஜெயம் ரவி-த்ரிஷா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா தங்கள் கேரக்டர்களின் பெயரை ட்விட்டர் பக்கத்தின் பெயராக மாற்றிய நிலையில் அவர்கள் இருவருடைய ப்ளூடிக் நீக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இது குறித்து முதல் முறையாக ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் விழாவில் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு ப்ளூடிக் வைத்திருப்பவர்கள் கட்டணம் கட்ட வேண்டும் என்று அறிவித்திருந்தார். அது மட்டும் இன்றி ப்ளூடிக் வைத்திருப்பவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றினால் அவர்கள் ப்ளூடிக்கை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் புதிய விதி அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் ’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி மற்றும் குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷா ஆகிய இருவரும் தங்கள் இருவரின் கேரக்டர்களின் பெயர்களை ட்விட்டரில் மாற்றினர். இதனை அடுத்து இருவருடைய ப்ளூடிக் நீக்கப்பட்டது.
இது குறித்து சமீபத்தில் நடந்த ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் விழாவில் பேசிய அவர்கள் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த அனைவரும் கிட்டத்தட்ட தங்களது ட்விட்டர் பக்கத்தின் பெயர்களை மாற்றினோம். ஆனால் எங்கள் இருவரின் ப்ளூடிக் மட்டும் நீக்கப்பட்டு விட்டது. மீண்டும் ப்ளூடிக் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவது வருகிறது, விரைவில் ப்ளூடிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது’ என்று கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout