ஜெயம் ரவி - தன்யா ரவிச்சந்திரன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயம்ரவி நடித்த ’பூலோகம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஜெயம் ரவியின் 28வது படமாக உருவாகும் இந்த படத்தில் ’கருப்பன்’ படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். தன்யா ரவிச்சந்திரன் தனது பகுதியின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் இணைந்துள்ளார் என்றும் இந்த படத்தின் முதல்பாதியில் பெரும்பாலும் பிரியா பவானி சங்கர் காட்சிகள் தான் உள்ளது என்றும் இரண்டாம் பாதியில்தான் தன்யா ரவிச்சந்திரன் காட்சிகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
தன்யா, ப்ரியா பவானிசங்கர் இருவருக்குமே சம அளவில் முக்கியத்துவம் தரும் கேரக்டர்கள் இந்த படத்தில் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout