ஐஸ்வர்யாவுக்காக மீண்டும் இணையும் ஜெயம் ரவி மற்றும் தமன்னா!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஜெயம் ரவி மற்றும் தமன்னா வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ’பூமிகா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் தமிழ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம்ரவியும், தெலுங்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமன்னாவும் நாளை மதியம் 12 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
The first look of my bilingual film, #Boomika, will be released by @actor_jayamravi in Tamil and by @tamannaahspeaks in Telugu, tomorrow at 12noon! #Boomika #AishwaryaRajessh25 @karthiksubbaraj @RathindranR @kaarthekeyens @StonebenchFilms @Sudhans2017 @thinkmusicindia pic.twitter.com/WTRCUxWhH4
— aishwarya rajessh (@aishu_dil) October 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments