பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி?

  • IndiaGlitz, [Thursday,April 04 2019]

நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த 'கோமாளி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் தனது சகோதரர் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள 'தனி ஒருவன் 2' படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கவுள்ள பிரமாண்டமான படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் அவர் அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்க்ரீன்சீன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி தொடர்ச்சியாக மூன்று படங்கள் நடிக்கவுள்ளதாகவும், அவற்றில் ஒன்று 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் அகமது இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் அவர் நடிக்கும் இரண்டாவது படத்தை ராஜீவ் மேனன் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, இயக்குனர் ராஜீவ் மேனனை சந்தித்து கதை கேட்டதாகவும், கதை தனக்கு திருப்தி அளிப்பதாக கூறியதாகவும் தெரிகிறது.

ராஜீவ் மேனன் சமீபத்தில் இயக்கிய 'சர்வம் தாளமயம்' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த விஜய்சேதுபதி-ஆண்ட்ரியா

ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்' திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும்

மீண்டும் இரண்டு நாயகர்கள் படத்தை இயக்கும் பாலா

விக்ரம்-சூர்யா நடித்த 'பிதாமகன்', 'ஆர்யா-விஷால் நடித்த 'அவன் இவன்' ஆகிய இரண்டு நாயகர்களின் படங்களை இயக்கிய இயக்குனர் பாலா மீண்டும் ஒரு இரட்டை நாயகர்கள் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

தம்பி குற்றச்சாட்டுக்கு நடிகர் நாசர் விளக்கம்

நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக மத்திய சென்னையில் போட்டியிடுகின்றார்.

அனிருத்தின் 'புதுசாட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தலைவர் 167' திரைப்படம், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' உள்பட

'தல' தோனி ரசிகையாக மாறிய பாட்டி: மும்பையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடிய சென்னை அணி தோல்வி அடைந்தாலும் சென்னை அணியின் கேப்டன் தல தோனி, மும்பைவாசிகளின் இதயத்தை ஒரே ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் வென்றுவிட்டார்.