மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா: இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,March 07 2022]

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியான ’தனி ஒருவன்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி நடிப்பில் அகமது இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ’ஜனகணமன’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் என்றும் இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு செல்ல முடியாத நிலையில் இந்த படத்தின் திரைக்கதை முழுவதையும் இயக்குனர் அகமது தற்போது முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும் ஒரு காதல் கதையும் இணைந்து செல்கிறது என்றும் எனவே இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இயக்குனர் அகமது தெரிவித்துள்ளார்.

’தனி ஒருவன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆன நிலையில் இந்த படத்தில் அதைவிட மிகவும் சிறப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் கவின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'பீஸ்ட்' நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்த நடிகை நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'அரபிக்குத்து' பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி! வீடியோ வைரல்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது மட்டுமின்றி யூடியூப்பில் இந்த பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப் பெரிய சாதனை

இளையராஜா செய்து தருவார் என நம்புகிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்!

 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  அவர்கள் துபாயில் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை அமைத்து இருக்கும் நிலையில் அந்த ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா வருகை தந்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த பிரபல நடிகையுமா? 'அரபிக்குத்து' பாடலுக்கு செம ஆட்டம்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் யூடிபில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நடிகையின் கணவர் திடீர் தலைமறைவு: என்ன காரணம்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகையின் கணவர் திடீரென தலைமறைவாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .