ஜெயம் ரவி - நயன்தாராவின் 'இறைவன்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,October 24 2023]

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்த ‘இறைவன்’ என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறாத ‘இறைவன்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 26ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் உடன் கூடிய அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் மனதை கவறாத இந்த படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை அகமது இயக்கியுள்ளார். ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

More News

ஷங்கர் இயக்கி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. !

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களை  இயக்கி வருகிறார்.

தளபதி 68' பூஜை வீடியோ.. நட்சத்திரங்களின் முழு விவரங்கள்..!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.  விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நிலையில்

முதல்ல சத்தியம் பண்ணுங்க.. மத்ததெல்லாம் அப்புறம் தான்.. ஏஜிஎஸ் கேள்விக்கு வெங்கட்பிரபு பதில்..!

'தளபதி 68' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் 'இன்று ஆயுத பூஜை, எனவே அந்த ஸ்கிரிப்ட் கொஞ்சம் அனுப்பிச்சா, பூஜையில் வைத்துவிடலாம்

சென்ற படத்தில் ரகுமானுடன், இந்த படத்திலும் ஒரு மானுடன்: அடுத்த பட இசையமைப்பாளர் குறித்து பார்த்திபன்..!

'இரவின் நிழல்' என்ற திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்த நிலையில், பார்த்திபன் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேல் தள்ளிப்போனது சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாக ரிலீஸ்.. ரசிகர்கள் அதிருப்தி..!

கடந்த ஜூலை மாதம் ரிலீசான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஒரு வருடம் தள்ளிப் போனதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்