ஜெயம் ரவி, ஆர்யா பட நாயகியா இவர்?  கணவர் குழந்தைகளுடன் உள்ள அழகிய புகைப்படங்கள்...!

  • IndiaGlitz, [Tuesday,March 07 2023]

ஜெயம் ரவி, ஆர்யா படங்களில் நாயகி ஆக நடித்த நடிகை கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் மற்றும் மலையாள நடிகை ரேணுகா மேனன் பரத் நடித்த ’பிப்ரவரி 14’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ஜெயம் ரவி நடித்த ’தாஸ்’ ஆர்யா நடித்த ’கலாபக் காதலன்’ உள்ளிட்ட படங்களிலும் ஒரு சில மலையாள தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுராஜ் என்பவரை ரேணுகா மேனன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பு தொழிலை நிறுத்திவிட்ட ரேணுகா மேனன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் நடன பள்ளி ஒன்று நடத்தி வருவதாகவும் இந்திய குழந்தைகளுக்கு நடனம் மற்றும் பாரம்பரியத்தை கற்றுக் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ரேணுகா மேனன் தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரேணுகா மேனனின் குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி.. கவர்ச்சி நடிகையின் சகோதரி கைது..!

வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கவர்ச்சி நடிகையின் சகோதரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று முதல் 'லால் சலாம்' படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

'புஷ்பா 2' படத்தில் ராஷ்மிகாவை அடுத்து இணைந்த பிரபல நடிகை..!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் சமந்தாவின் ஐட்டம்

தனுஷ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா.. டிரைலர் ரிலீஸ்..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த 'சிட்டாடெல்' என்ற வெப் தொடர் விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இருக்கும் நிலையில் இதன் தமிழ் டிரைவர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

என்ன ஆச்சு அஜித் பட நடிகைக்கு? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் படிப்படியாக குணமாகி வருவதாகவும் புகைப்படத்துடன் கூடிய