ஜெயம் ரவி விவாகரத்து மனு இன்று விசாரணை.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவை அளித்தார்.
ஆனால் ஜெயம் ரவி விவாகரத்து குறித்து தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவியின் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். இதனையடுத்து இன்று இருவர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout