அக்சயகுமார் வேடத்தை ஏற்ற ஜெயம் ரவி

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

ஜெயம் ரவி நடித்த இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான 'டிக் டிக் டிக்' ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அவர் தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மும்பை வெடிகுண்டு சம்பவம் குறித்த திரைப்படமான 'பேபி' என்ற திரைப்படம் பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது. அக்சயகுமார், ராணாடக்குபாய், அனுபம்கெர், டாப்சி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்கியிருந்தார். இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது

அக்சயகுமார் நடித்த இந்தியன் சீக்ரெட் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.கே.அஹ்மத் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'என்றென்றும் புன்னகை மற்றும் 'மனிதன்' படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 முதல் அரசியல் களத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து குதிக்கவுள்ள நிலையில் இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைமுன்னோட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இந்த ஆண்டின் முதல் படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'

நார்வே தமிழ் திரைப்பட விழா: விருதுகளை அள்ளிய 'அருவி'

ஒவ்வொரு ஆண்டும் நார்வேயில் தமிழ் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய வீரர்களும், அவர்களுக்கான தொகையும்

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்று பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் அஸ்வின், மெக்கல்லம், பிராவோ, உள்பட சில வீரர்களை ஏலம் எடுத்த அணி மற்றும் அவர்களுக்கான தொகை

தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன்சிங்

ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் இன்று பெங்களூரில் நட்ந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வினை மிஸ் செய்தது. அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் அள்ளிக்கொண்டது