'கோமாளி' திரைப்படத்தில் 9 கேரக்டரில் ஜெயம்ரவி?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'நவராத்திரி' திரைப்படத்தில் 9 கேரக்டர்களிலும் உலக நாயகன் கமல்ஹாசன், 'தசாவதாரம்' படத்தில் 10 கேரக்டர்களிலும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் விரைவில் வெளிவரவுள்ள 'கோமாளி' படத்தில் ஜெயம்ரவி 9 கேரக்டர்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 'கோமாளி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளியானது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதில் நடுவில் ஜெயம்ரவியும் அவரது இரண்டு பக்கங்களில் எட்டு பேர்களும் உள்ளனர். இதில் உள்ள அந்த எட்டு பேர்களும் ஜெயம் ரவியாகவே இருக்கும் என கருதப்படுவதால் அவர் இந்த படத்தில் 9 கேரக்டர்களில் நடித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் சிவாஜி, கமல்ஹாசனை அடுத்து ஒரே படத்தில் அதிக கேரக்டர்களில் நடித்தவர் ஜெயம் ரவி என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கேஎஸ். ரவிகுமார், யோகிபாபு உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது .
To all my fans & friends, here it is #ComaliMotionPoster. Keep your expectations high for upcoming days, More surprises awaiting.
— Jayam Ravi (@actor_jayamravi) May 18, 2019
Feel the silver screen experience in @agscinemas ??@Pradeeponelife @MSKajalAggarwal @SamyukthaHegde @Richardmnathan @hiphoptamizha @VelsFilmIntl pic.twitter.com/ZAFmvl1YG0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments